Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, October 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»செருப்பு வீச்சு முதல் கரூர் வழக்கு வரை: முதல்வர் ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் 12 கேள்விகள்
    மாநிலம்

    செருப்பு வீச்சு முதல் கரூர் வழக்கு வரை: முதல்வர் ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் 12 கேள்விகள்

    adminBy adminOctober 1, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    செருப்பு வீச்சு முதல் கரூர் வழக்கு வரை: முதல்வர் ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் 12 கேள்விகள்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: கரூர் நெரிசல் உயிரிழப்பு சம்பவம் திமுக அரசின் நிர்வாகத் தோல்வியால் நிகழ்ந்த பேரிடர் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு வைத்துள்ளார். இது தொடர்பாக மாநில அரசுக்கு அவர் 12 கேள்விகளை முன்வைத்துள்ளார்.

    கடந்த சனிக்கிழமை (செப்.27) கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்தனர். இந்தச் சம்​பவம் தொடர்​பாக விசா​ரிக்​க​வும், உயி​ரிழந்​தோர் குடும்​பத்​தினருக்கு ஆறு​தல் தெரிவிக்​க​வும் பாஜக எம்​.பி.க்​கள் ஹேம​மாலினி, அனு​ராக் தாக்​கூர், தேஜஸ்வி சூர்யா மற்​றும் கூட்​ட​ணிக் கட்சி எம்.பி.க்​கள் என 8 பேர் கொண்ட குழுவை அமைத்தார் பாஜக தேசி​யத் தலை​வர் ஜே.பி. நட்டா. அந்த குழு நேற்று கரூர் வந்து சம்பவ இடத்தையும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரையும் சந்தித்தது.

    இந்நிலையில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை குறிப்பிட்டு 12 கேள்விகளை எக்ஸ் சமூக வலைதள பதிவில் முன்வைத்துள்ளார். அதின் விவரம்:

    “செவ்வாய்க்கிழமை (செப்.30) அன்று பாஜக தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட உண்மை கண்டறியும் குழுவுடன் கரூர் கூட்ட நெரிசலால் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து உரையாடினோம். பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரின் குரலும் மனதில் ஏற்படுத்திய தாக்கத்தை விவரிக்க இயலவில்லை. முழுமையாகக் கலந்துரையாடி, இந்தப் பிரச்சினையைத் தெளிவாகப் புரிந்துகொண்ட பிறகு, மனதில் எழுந்த கேள்விகளை முதல்வர் ஸ்டாலினிடம் முன்வைக்க விரும்புகிறேன்.

    > முதல்வர் மற்றும் துணை முதல்வர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளுக்கு மட்டும் கரூர் பேருந்து நிலைய ரவுண்டானாவை ஒதுக்கிய நிலையில், மற்ற கட்சிகளுக்கு ஒதுக்காதது ஏன்?

    > விஜய் மீது செருப்பு வீசப்பட்டதையும், அங்கு கூடியிருந்த தொண்டர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதையும் காணொளிகள் காட்டுகின்றன. கத்தியால் குத்தப்பட்டதாகவும் சிலர் கூறினர். இவற்றைத் தாண்டி கூட்ட நெரிசல் ஏற்படக் காரணம் என்ன?

    > கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்த கள்ளச்சாராய மரணங்கள், வேங்கைவயல் விவகாரம், மெரினா விமான சாகச நிகழ்வில் கூட்ட நெரிசல் மரணங்கள், 25 லாக்-அப் மரணங்கள் போன்றவற்றுக்கு எல்லாம் செல்லாத முதல்வர் ஸ்டாலின், கரூரில் மட்டும் சிறப்பு கவனம் செலுத்துவது ஏன்?

    > திமுகவினரின் உணர்ச்சிப்பூர்வ நாடகத்தால் சந்தேகமடைந்துள்ள கோடிக்கணக்கான மக்களில் நானும் ஒருவன். கூட்ட நெரிசலுக்குப் பிறகு, உண்மையை மறைக்க திமுக அரசு இவ்வளவு அசாதாரண அவசரத்துடன் செயல்பட்டது ஏன்?

    > 25 பேர் மீது வழக்கு பதிந்து, பத்திரிகையாளர் பெலிக்ஸ் உட்பட நான்கு பேரைக் கைது செய்து, மக்கள் மத்தியில் எழும் அனைத்துக் கேள்விகளையும் சந்தேகங்களையும் ஏன் இவ்வளவு விரைவாகத் திமுக அரசு முடக்குகிறது?

    > 10,000 பேர் தான் கூடுவர் என்று தவறாக கணித்ததாக விஜய் மீது குற்றம் சாட்டும் திமுக அரசின் காவல் துறை, கூட்டத்தைச் சரியாக மதிப்பிடாதது ஏன்?

    > விஜய், தாமதமாக வருவதனால் சில அசம்பாவிதங்கள் நடக்க வாய்ப்புள்ளது என்று அரசு கருதினால் கூட்டத்தை ஏன் ரத்து செய்யவில்லை?

    > கூட்டத்தைக் கட்டுப்படுத்த பணியமர்த்தப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை மிகக்குறைவு என்பது உறுதி. உண்மையிலேயே எத்தனை பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்? பெரும் அரசியல் பேரணி நடக்கும் வேளையில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கரூரில் இல்லாதது ஏன்?

    > இவ்வளவு குறைபாடுகள் அரசுத் தரப்பில் உள்ளன என்பது நிரூபணமான பின்பும், ஏன் அந்த மாவட்டத்தில் இருக்கக்கூடிய எந்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை? இதில் ஏதேனும் உண்மைகள் புதைந்திருந்தால் அவை அம்பலப்பட்டுவிடும் என்ற அச்சமா?

    > அறிக்கை சமர்ப்பிக்கும் முன்பே, திமுகவின் சட்டம் ஒழுங்கு தோல்வியை மறைக்கும் விதமான கருத்துகளை விசாரணை ஆணையத் தலைவர் வெளியிடுவது ஏன்?

    > விசாரணை நடைபெறும் நிலையில் அது குறித்து பொது அறிக்கைகளை வெளியிட வருவாய் செயலாளருக்கு அதிகாரம் அளித்தது யார்? இது விசாரணையின் நடுநிலைத்தன்மையை சமரசம் செய்யாதா? திறமைமிக்க அரசு அதிகாரிகளைத் திமுகவின் கைப்பாவைகளைப் போல பயன்படுத்துவது சரியா?

    > அஜித்குமார் லாக்-அப் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றிய திமுக அரசு, கரூர் வழக்கை ஒப்படைக்கத் தயங்குவது ஏன்?

    திமுக அரசின் நிர்வாகத் தோல்வியால் நிகழ்ந்த பேரிடரே இத்துயரம் என்பது சந்தேகத்திற்கு இடமின்றித் தெளிவாகத் தெரிகிறது. எனவே தான், ஒரு நபர் ஆணையத்தின் மீது எந்த நம்பிக்கையுமின்றி சிபிஐ விசாரணை வேண்டுமெனக் கோருகிறோம். கோரிக்கையைப் பரீசீலிப்பதோடு, தமிழக மக்கள் சார்பாக நான் முன்வைத்த கேள்விகளுக்கும் முதல்வர் ஸ்டாலின் பதில் கூறுவார் என நம்புகிறேன்” என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    காரணம் தேடாமல் பழைய ஒய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவீர்: அன்புமணி

    October 1, 2025
    மாநிலம்

    ‘விஜய் அரசியலுக்கு புதுமுகம்’ – தவெகவுக்கு செல்லூர் ராஜு அறிவுரை

    October 1, 2025
    மாநிலம்

    கரூர் துயரம்: அவதூறு கருத்து வெளியிட்டதாக கைதான யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு ஜாமீன்

    October 1, 2025
    மாநிலம்

    இடுக்கியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த தமிழகத்தை சேர்ந்த 3 பேர் பலி

    October 1, 2025
    மாநிலம்

    அருணா ஜெகதீசன் விசாரணையை காங்கிரஸ் எதிர்க்கவில்லை: செல்வப்பெருந்தகை விளக்கம்

    October 1, 2025
    மாநிலம்

    விஜய்யை கைது செய்யக் கோரி ஒட்டப்பட்ட போஸ்டர்களை கிழித்த கல்லூரி மாணவிகள்!

    October 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • எடை இழப்பு மருந்து ‘ஓசெம்பிக்’ இந்தியாவில் பயன்படுத்த ஒப்புதல் அளித்தது: அதன் சுகாதார நன்மைகள் மற்றும் அபாயங்கள் குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • காரணம் தேடாமல் பழைய ஒய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவீர்: அன்புமணி
    • ஆப்டிகல் மாயை: உங்களுக்கு கூர்மையான கண்பார்வை இருப்பதாக நினைக்கிறீர்களா? 10 வினாடிகளில் புல்லுக்கு மத்தியில் மறைக்கப்பட்ட தவளையை கண்டுபிடி! | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • மலேசியாவில் ஆசியான் உச்சி மாநாடு: மோடி, ட்ரம்ப் சந்தித்து பேச வாய்ப்பு
    • ஐசிசி டி20 கிரிக்கெட் பேட்டிங் தரவரிசை: அதிக புள்ளிகள் பெற்று அபிஷேக் சர்மா சாதனை!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.