சென்னை: சென்னையில் இன்று (செப்.30) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,860-க்கு விற்பனையாகிறது.
சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிப்பு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு, உக்ரைன் – ரஷ்யா போர், இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது.
இதேபோல வணிகத் துறை நிறுவனங்கள் பல உற்பத்தி மற்றும் முதலீடு சார்ந்து வெள்ளி முதலீடு மற்றும் கொள்முதலில் ஈடுபட்டு வருகின்றன. பல்வேறு மின்சார பொருட்களின் வடிவமைப்பு பணிகளில் வெள்ளி பயன்படுத்தப்படுகிறது. இதோடு உலக நாடுகளும் வெள்ளியை அதிகளவில் முதலீடு செய்து வருவதும் வெள்ளியின் விலை உயர்வுக்கு காரணம் என துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்று ஒரே நாளில் இரண்டும் முறை புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை இன்றும் உயர்ந்துள்ளது. சென்னையில் 22 காரட் ஆபரண தங்கம் விலை கிராமுக்கு ரூ.90-ம், பவுனுக்கு ரூ.720-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.10,860-க்கும், ஒரு பவுன் ரூ.86,880-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது. கிராமுக்கு ரூ.1-ம், கிலோவுக்கு ரூ.1,000-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.161-க்கும், ஒரு கிலோ ரூ.1,61,000-க்கும் விற்பனையாகிறது.
கடந்த ஐந்து நாட்களில் தங்கம் விலை நிலவரம்:
செப்.30 ஒரு பவுன் ரூ.86,880
செப்.29 ஒரு பவுன் ரூ.86,160
செப்.27 ஒரு பவுன் ரூ.85,120
செப்.26 ஒரு பவுன் ரூ.84,400
செப்.25 ஒரு பவும் ரூ. 84,080