சென்னை: தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச் செயலர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: ஆவின் நிர்வாக இயக்குநர் மற்றும் பால் உற்பத்தி ஆணையர் அண்ணாதுரை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் நிர்வாக இயக்குநராகவும், அப்பதவியில் இருந்த அ.ஜான் லூயிஸ், ஆவின் நிர்வாக இயக்குநர் மற்றும் பால் உற்பத்தி ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். உயர்கல்வித்துறை இணை செயலர் க.கற்பகம், சென்னை மாநகராட்சி இணை ஆணையர் (கல்வி) பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.