ஜான் ஆபிரஹாம் படத்தின் மூலம் இந்தியிலும் அறிமுகமாக இருக்கிறார் மீனாட்சி சவுத்ரி.
இந்தியில் ’ஃபோர்ஸ்’ படம் மிகவும் பிரபலம். இதுவரை 2 பாகங்கள் வெளியாகியுள்ளது. இதன் மூன்றாம் பாகத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் ஜான் ஆபிரஹாமுக்கு நாயகியாக நடிக்க மீனாட்சி சவுத்ரியை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். அவர் இந்தியில் அறிமுகமாகும் முதல் படமாக இது அமைந்திருக்கிறது.
தென்னிந்திய திரையுலகில் ‘கோட்’, ‘சங்கிராந்திக்கி வஸ்துணாம்’, ’குண்டூர் காரம்’, ‘ஹிட் 2’, ‘லக்கி பாஸ்கர்’ உள்ளிட்ட பல வரவேற்பைப் பெற்ற படங்களில் நடித்தவர் மீனாட்சி சவுத்ரி. ‘ஃபோர்ஸ் 3’ படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமாகிறார். இந்தியில் அறிமுகமானாலும் தொடர்ச்சியாக தென்னிந்திய திரையுலகிலும் கவனம் செலுத்தவுள்ளார்.
’ஃபோர்ஸ் 3’ படத்தில் மீனாட்சி சவுத்ரிக்கு சண்டைக் காட்சிகளும் இருக்கிறது. இதற்காக பயிற்சி எடுத்து வருகிறார். நவம்பர் மாதம் இதன் படப்பிடிப்பை தொடங்க படக்குழு ஆயத்தமாகி வருகிறது.