விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சி ‘சூப்பர் சிங்கர்’ இதன் 11வது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதில் உன்னிகிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம் உடன் இயக்குநர் மிஷ்கினும், இசையமைப்பாளர் தமனும் நடுவராக பங்கேற்றுள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் இந்த வாரம் இசைஞானி இளையாராஜாவை கொண்டாடும் விதமாக ‘செலிப்ரேட்டிங் இசை’ என்ற தலைப்பில் அடுத்த மூன்று எபிசோடுகள் நடைபெறவுள்ளது. இதில் முழுக்க முழுக்க இளையராஜா பாடல்களை பங்கேற்பாளர்கள் பாடவுள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் வெங்கட்பிரபு, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மற்றும் கங்கை அமரன் ஆகிய மூவரும் கலந்துகொண்டனர். இளையராஜாவைப் போலவே பாடிய போட்டியாளர் சரணுக்கு, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இளையராஜாவின் புகைப்படம் பதித்த டீசர்ட்டை பரிசளித்து வாழ்த்தியுள்ளார்.