ஸ்ரீநகர்: காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதிகளுக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் விநியோகம் செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய தாரிக் அகமது மீர் என்பவரின் அசையா சொத்துகளை என்ஐஏ நேற்று முன்தினம் முடக்கியது.
ஷோபியன் மாவட்டம், மால்தேரா கிராமத்தில் 780 சதுர அடி நிலத்தில் உள்ள கான்கிரீட் வீடு, ஒரு பழத்தோட்டம் ஆகியவை முடக்கப்பட்ட சொத்துகளில் அடங்கும். பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஹிஸ்புல் தீவிரவாதி சையத் நவீத் முஷ்டாக்கின் கூட்டாளியான தாரிக் அகமது மீர் கடந்த ஆண்டு ஏப்ரலில் கைது செய்யப்பட்டார்.