டோவினோ தாமஸ் நடிப்பில் ‘லோகா: சாப்டர் 2’ உருவாக இருப்பதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
டாமினிக் அருண் இயக்கத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான படம் ‘லோகா: சாப்டர் 1’. துல்கர் சல்மான் தயாரிப்பில் வெளியான இப்படம் மாபெரும் வசூல் சாதனை புரிந்தது. கேரளாவில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை நிகழ்த்தியிருக்கிறது. இதில் டோவினோ தாமஸ், துல்கர் சல்மான் உள்ளிட்டோர் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.
இதன் தொடர்ச்சியாக அடுத்டுத்த பாகங்கள் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்திருந்தது. தற்போது இதன் 2-ம் பாகத்தினை துல்கர் சல்மான் அறிவித்துள்ளார். இதில் டோவினோ தாமஸ் நாயகனாக நடிக்கவிருப்பதாக அறிவித்து வீடியோ பதிவொன்றையும் வெளியிட்டுள்ளார். ’லோகா: சாப்டர் 1’ படத்தில் பணிபுரிந்த அதே தொழில்நுட்பக் குழுவினர் தான் இதிலும் பணிபுரிய இருக்கிறார்கள்.
விரைவில் படப்பிடிப்பினை தொடங்கி, அடுத்தாண்டு வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. முதல் பாகம் போல் அல்லாமல், இப்படத்தினை அதிக பொருட்செலவில் தயாரிக்க துல்கர் சல்மான் திட்டமிட்டு இருக்கிறார்.