புதுடெல்லி: ஐஎஸ்எஸ்எஃப் ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் ஜோனாதன் கவின் அந்தோணி 244.8 புள்ளிகளை குவித்து முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார்.
இத்தாலியின் லூகா அரிகி (236.3) வெள்ளிப் பதக்கமும், ஸ்பெயினின் லூகாஸ் சான்செஸ் டோம் ( 215.1) வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர். மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் இறுதிப் போட்டியில் இந்தியாவின் ராஷ்மிகா சாஹல் 236.1 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்றார்.