நடிகர் சூர்யாவின் மகள் தியா ’லீடிங் லைட்’ என்ற ஆவணக் குறும்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆகியுள்ளார்.
சூர்யா, ஜோதிகா தம்பதியின் மகள் தியா. தங்கள் குழந்தைகளின் படிப்புக்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் சூர்யா, ஜோதிகா மும்பையில் குடியேறினர். படப்பிடிப்பு சமயங்களில் மட்டும் சென்னை வந்து சென்று கொண்டிருந்தனர். இந்த சூழலில் இவர்களின் மகள் தியா தற்போது ஆவணக் குறும்படம் ஒன்றை இயக்கியுள்ளார்.
2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் சார்பில், சூர்யா ஜோதிகா தயாரித்துள்ளம் இந்த ஆவணக் குறும்படம், பாலிவுட் லைட்வுமன்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாயிருக்கிறது. இதற்கு ‘லீடிங் லைட்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
திரைக்கு பின்னால் இருந்து பணிபுரியும் லைட்வுமன்களை பற்றியும், அப்பெண்களின் அனுபவங்களை விவரிக்கும் டாக்குமெண்ட்ரி – டிராமாவாக இப்படம் உருவாகியுள்ளது. ஆஸ்கர் போட்டிக்காக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று (செப் 26) முதல் அக்டோபர் 2 வரை இப்படம் திரையிடப்படுகிறது