30 ஆண்டு திரைப் பயணத்தில் ஷாருக் கான் முதல்முறையாகத் தேசிய விருதை பெற்றிருக்கிறார். இதுவரை கிடைக்காத விருது, தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான அட்லி குமாரின் இயக்கத்தில் கடந்த 2023இல் உருவான ‘ஜவான்’ படத்தில் அவரின் நடிப்புக்காகக் கிடைத்திருப்பது தமிழ் சினிமா இயக்குநர்களின் திறமைக்குச் சான்று.
சமீபத்தில் தனது மகன் ஆர்யன் கான் இயக்கிய அவரின் முதல் முயற்சியான ‘The Ba***ds of Bollywood’ இணையத் தொடரில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் ஷாருக். அடுத்து சித்தார்த் ஆனந்த் இயக்கும் ‘King’ என்கிற படத்தில் ஷாருக் ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்க, அதில் ஷாருக்கின் மகள் சுஹானா கானும் நடிக்க இருக்கிறார்.