சென்னை: பொதுமக்கள் குடிநீர், கழிவுநீர் வரி மற்றும் கட்டணங்களை செலுத்த ஏதுவாக சென்னை குடிநீர் வாரியத்தின் அனைத்து வசூல் மையங்களும் வரும் ஞாயிற்றுக்கிழமை (செப்.28-ம் தேதி) இயங்கும்.
இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை குடிநீர் வாரியத்துக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய 2025-ம் ஆண்டு மார்ச் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான முதல் அரையாண்டுக்கான குடிநீர், கழிவுநீரகற்று வரி, கட்டணங்கள் மற்றும் நிலுவைத் தொகையை செப்டம்பர் மாதம் 30-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.
வரி செலுத்த ஏதுவாக அனைத்து பகுதி அலுவலகங்கள் மற்றும் தலைமை அலுவலகங்களில் இயங்கும் வசூல் மையங்கள் வரும் ஞாயிற்றுக்கிழமை (செப்.28) காலை 10.30 மணிமுதல் மதியம் 01.30 மணிவரை இயங்கும்.
மேலும், நுகர்வோர்கள் என்ற வலைதளத்தைப் பயன்படுத்தி பணம் செலுத்தலாம். இ-சேவை மையங்கள், யூபிஐ உள்ளிட்ட பிற கட்டண முறைகளையும் பயன்படுத்தியும் குடிநீர், கழிவுநீரகற்று வரி மற்றும் கட்டணங்களைச் செலுத்தலாம். எனவே, நுகர்வோர் செப்.30-ம் தேதிக்குள் வரிகள் மற்றும் கட்டணங்களைச் செலுத்தி மேல்வரியைத் தவிர்க்கலாம்.