அமராவதி: ஆந்திர சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் அமராவதியில் நடைபெற்று வருகிறது. குழந்தைப் பேறு குறித்து நேற்று நடைபெற்ற விவாதத்தில், முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியதாவது: அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது மிகவும் ஆபத்தானது. அறுவை சிகிச்சை முறையில் குழந்தை பெற்றுக் கொள்வதில் நாட்டிலேயே ஆந்திரா முதலிடம் வகிக்கிறது.
முகூர்த்த நேரத்தில் குழந்தை பிறக்கும் வகையில் அறுவை சிகிச்சை நேரத்தை நிர்ணயிக்கிறார்கள். இது மிகவும் தவறாகும். பெற்றோருக்கு சாதகமாக அல்லது மூட நம்பிக்கை காரணமாக அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றெடுக்கும் சம்பவங்கள் நடைபெறுகின்றன. ஆனால், மருத்துவ ரீதியாக தேவைப்பட்டால் மட்டுமே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.