புதுமுக இயக்குநர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவிருப்பது உறுதியாகி இருக்கிறது.
‘மாவீரன்’ இயக்குநர் மடோன் அஸ்வின் மற்றும் ‘மெய்யழகன்’ பிரேம்குமார் ஆகியோரின் படங்களில் இருந்து விலகிவிட்டார் விக்ரம். இதனால் விக்ரமின் அடுத்த பட இயக்குநர் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால், அடுத்ததாக புதுமுக இயக்குநர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவிருப்பது உறுதியாகி இருக்கிறது.
இப்படத்தினை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் மூலம் அருண் விஸ்வா தயாரிக்கவுள்ளார். இந்த இயக்குநர் பெயரை ரகசியமாக வைத்திருக்கிறார்கள். அவர் கூறிய கதை மிகவும் பிடித்துவிடவே உடனடியாக தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் விக்ரம். இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு வாரத்தில் வெளியாகும் என்கிறார்கள் திரையுலகில்.
தற்போது விக்ரமுடன் நடிக்கும் நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படத்தினை முடித்து, அடுத்தாண்டு கோடை விடுமுறைக்கு வெளியிட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறது படக்குழு. நீண்ட வருடங்கள் கழித்து புதுமுக இயக்குநர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.