சென்னை: தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் சார்பில் உறுப்பு தான தினம்-2025 நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் உறுப்பு கொடையாளர் குடும்பத்தினருக்கு சிறப்பு செய்து, உறுப்பு மாற்று சிகிச்சையில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் விருதுகள் வழங்கினார்.
தொடர்ந்து, வருடாந்திர அறிக்கை மற்றும் மேம்படுத்தப்பட்ட செயலி விடியல் 2.0 ஆகியவற்றை வெளியிட்டு, உறுப்பு கொடையாளர்களுக்கு மலரஞ்சலி மற்றும் இசையஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: கடந்த 2008-ம் செப்.5-ம் தேதி மூளைச்சாவு உறுப்பு மாற்று சிகிச்சை திட்டத்தை அன்றைய முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.
2008-ம் ஆண்டு முதல் தற்போது வரை 2,242 பேர் உடலுறுப்பு கொடையாளர்களாக இருந்துள்ளனர். இந்த 2,242 பேரின் உடலுறுப்பு தானத்தின் மூலம் 8,017-க்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு வகைகளில் பயன்பெற்றுள்ளனர் என்றார்.