சென்னை: சென்னை, டிஜிபி அலுவலகத்துக்கு நேற்றுமுன்தினம் நள்ளிரவு மின்னஞ்சல் ஒன்று வந்தது. அதில், மந்தைவெளியில் உள்ள நடிகர் எஸ்.வி. சேகர் வீட்டில் இன்னும் சற்று நேரத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து, டிஜிபி அலுவலக போலீஸார் அளித்த தகவலின் பேரில் பட்டினப்பாக்கம் போலீஸார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயுடன் நடிகர் எஸ்.வி.சேகர் வீட்டுக்கு விரைந்தனர்.
அங்கு, வீடு முழுவதும் போலீஸார் சோதனை நடத்தியும், வெடிகுண்டு எதுவும் சிக்காததால், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரிய வந்தது. இதுகுறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வரு கின்றனர்.