வடசென்னை மாதவரத்தில் அமைந்துள்ள மெரிடியன் மருத்து வமனையில் இதய அறிவியல் மையத்தை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
மாதவரம் 200 அடி ரிங் ரோடு, ஜவஹர்லால் நேரு சாலையில் ‘மெரிடியன் மருத்துவமனை’ உள்ளது. இந்த மருத்துவமனையில் இதய அறிவியல் மையத்தை (மெரிடியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் கார்டியாக் சயின்ஸ்) சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று திறந்து வைத்தார்.
இவ்விழாவில், 16,000-க்கும் மேற்பட்ட வெற்றிகரமான இதய அறுவை சிகிச்சைகளை மேற்கொண்ட தலை சிறந்த இதய அறுவை சிகிச்சை நிபுணரும், பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை இதய அறுவை சிகிச்சை களில் திறமையானவரும்.
இதய அறிவியல் மையத்தின் இயக்குநருமான மருத்துவர் மூசா குன்ஹி, சர்வதேச பயிற்சி மற்றும் அனுபவமுள்ள புகழ் பெற்ற இதய சிகிச்சை நிபுணர் மருத்துவர் அஸ்வனி லதா, வடசென்னை மக்களவை உறுப்பி னர் கலாநிதி வீராசாமி, மாதவரம் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் எஸ்.சுதர்சனம், நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதி உறுப் பினர் ரூபி ஆர்.மனோகரன், பீஷ்ம ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.
வட சென்னையில் 300 படுக்கைகளுடன் உள்ள இந்த மருத்துவமனையில் அமைந்துள்ள முதல் மற்றும் முழுமையான இதய சிகிச்சை, பராமரிப்பு மையம் இது வாகும். முழுமையான உலகத் தரமான உயர்தர சிகிச்சை வழங்கப் படுகிறது. வடசென்னை பகுதியில் முழுமையான மருத்துவ சுகாதார பராமரிப்பு வசதிகள் வழங்கு வதில் மெரிடியன் மருத்துவ மனை முன்னோடியாக திகழ் கிறது. புற்றுநோய் சிகிச்சையில் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையை நிறுவிய முதல் மருத்துவமனை இதுவாகும்.
இதய சிகிச்சை, இதய அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு புற்று நோயியல், இரைப்பை குடல், நரம்பியல், எலும்பியல், மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, பொது மருத்துவம், மக ளிர் மருத்துவம் வரை முழு அளவி லான மருத்துவ சிகிச்சையை வட சென்னையில் வழங்கும் ஒரே மருத்துவமனையாக மெரிடியன் மருத்துவமனை உள்ளது. உலகத் தரம் வாய்ந்த 24/7 இதய கேத் லேப் ஆய்வகம் அதி நவீன தொழில் நுட்பங்களுடன் உள்ளது.
இதய சிகிச்சைகளுக்கு சர்வ தேச பயிற்சி பெற்ற இதய நோய் நிபுணர்கள் பலூன் ஆஞ்சியோ பிளாஸ்டி, கரோனரி ஆஞ்சி யோகிராபி. அதெரெக்டமி. பேஸ்மேக்கர் இம்பிளான்டேஷன். எலக்ட்ரோ பிசியாலஜி நடைமுறை வசதிகள் இங்கு உள்ளன.