Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, September 21
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»சினிமா»“இந்தப் பெருமை எனக்கானது மட்டுமல்ல” – தாதாசாகேப் பால்கே விருது குறித்து மோகன்லால் நெகிழ்ச்சி! 
    சினிமா

    “இந்தப் பெருமை எனக்கானது மட்டுமல்ல” – தாதாசாகேப் பால்கே விருது குறித்து மோகன்லால் நெகிழ்ச்சி! 

    adminBy adminSeptember 21, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    “இந்தப் பெருமை எனக்கானது மட்டுமல்ல” – தாதாசாகேப் பால்கே விருது குறித்து மோகன்லால் நெகிழ்ச்சி! 
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    கொச்சி: தனக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவித்த மத்திய அரசுக்கு மோகன்லால் நன்றி தெரிவித்துள்ளார்

    நடிகர் மோகன்லால் சினிமாவுக்கு ஆற்றிய பங்களிப்பை சிறப்பிக்கும் விதமாக, இந்திய சினிமாவில் மிக உயரிய விருதாக கருதப்படும் தாதாசாகேப் பால்கே விருதை அவருக்கு அறிவித்துள்ளது மத்திய அரசு. செப்டம்பர் 23-ம் தேதி நடைபெறும் 71-வது தேசிய விருதுகள் விழாவில், இவ்விருது அவருக்கு வழங்கப்பட உள்ளது.

    இந்த நிலையில் தனக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவித்த மத்திய அரசுக்கு மோகன்லால் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “தாதாசாகேப் பால்கே விருதை மிக பணிவுடன் ஏற்கிறேன். இந்தப் பெருமை எனக்கானது மட்டுமல்ல. இந்தப் பயணத்தில் என்னுடன் இருந்த ஒவ்வொருவருக்கும் உரியது.

    எனது குடும்பத்தினர், ரசிகர்கள், சக கலைஞர்கள், நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகள் என அனைவருக்கும். உங்கள் அன்பு, நம்பிக்கை மற்றும் ஊக்கம் எனது மிகப்பெரிய பலமாக இருந்து, இன்று நான் யார் என்பதை வடிவமைத்துள்ளன. இந்த அங்கீகாரத்தை நான் நன்றியுடனும், முழு மனதுடனும் ஏற்றுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

    இந்திய சினிமாவில் ஆகச் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருப்பவர் மோகன்லால். மலையாள சினிமாவில் முன்னணி நடிகராகவும் வலம் வருகிறார். இவர் 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். திரைப்படத் துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்புக்காக 2001-ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும், 20190ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருதும் அவருக்கு வழங்கப்பட்டது.

    பிரதமர் மோடி, நடிகர் மம்மூட்டி உள்ளிட்ட பலரும் மோகன்லாலுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    On the recommendation of the Dadasaheb Phalke Award Selection Committee, the Government of India is pleased to announce that Shri. Mohanlal will be conferred the prestigious Dadasaheb Phalke Award 2023.

    Mohanlal’s remarkable cinematic journey inspires generations!

    The… pic.twitter.com/n1L9t5WQuP


    — Ministry of Information and Broadcasting (@MIB_India) September 20, 2025



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    சினிமா

    நடிகர் மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது: மத்திய அரசு அறிவிப்பு

    September 21, 2025
    சினிமா

    ‘இட்லி கடை’ ட்ரெய்லர் எப்படி? – பாரம்பரிய உணவு vs ஃபாஸ்ட் ஃபுட்!

    September 20, 2025
    சினிமா

    நடிகர் மோகன்லாலுக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிப்பு!

    September 20, 2025
    சினிமா

    தனுஷ் படத்தை உறுதி செய்த ‘லப்பர் பந்து’ இயக்குநர்!

    September 20, 2025
    சினிமா

    மீண்டும் ஓடிடி தளத்தில் வெளியான ‘குட் பேட் அக்லி’: என்னென்ன மாற்றங்கள்?

    September 20, 2025
    சினிமா

    செல்வராகவன் சாருக்கு ரசிகனாக இல்லாமல் யாரும் இருக்க முடியாது: சாந்தனு

    September 20, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • அரசியல் கட்சிகளின் பதிவு ரத்து: ஜவாஹிருல்லா கண்டனம்
    • சபரிமலை கோயில் ரூ.1,033 கோடியில் சீரமைப்பு: கேரள முதல்வர் பின​ராயி விஜயன் அறிவிப்பு
    • நவராத்திரி விழா: சுவாமி விக்ரகங்கள் திருவனந்தபுரத்துக்கு புறப்பாடு – கேரள ஆளுநர் இன்று எல்லையில் வரவேற்கிறார்
    • புனைவு வரலாற்றை தொல்லியல் ஆதாரங்களால் முறியடிக்க வேண்டும்: மத்திய தொல்லியல் துறை இயக்குநர் கருத்து
    • பார்வையற்ற யாசகரால் மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்க முடியாது: கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.