அமராவதி: ஆந்திர சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. சபாநாயகர் அய்யண்ண பாத்ருடு அவையை தொடங்கி வைத்தார். இக்கூட்டத்தில் ஜிஎஸ்டி சீர்திருத்த சட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது.
இது குறித்து முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசுகையில், “ஜிஎஸ்டி மறுசீரமைப்பை நான் வரவேற்கிறேன். வளர்ச்சி பணிகளுக்காக வரியினால் வருமானம் வருகிறது. அந்த வருமானத்தை பெருக்கி, அதன் மூலம் மக்களுக்கு சேவை புரிய வேண்டும்.
ஆனால், மாநில வளர்ச்சி குறித்து யோசிக்காமல் ஆட்சி புரிபவர்கள் அது குறித்து பேச கூட தகுதியற்றவர்கள் என்பது எனது கருத்து. கடன்பட்டு மாநிலம் வளர்ச்சியடைய கூடாது.
நிதி நெருக்கடி வந்தாலும், மாநிலம் மற்றும் நாட்டின் நலனே முக்கியம். புதிய சீர்திருத்தத்தால் ரூ. 2 லட்சம் கோடி வரை ஆதாயம் வரும் என எதிர்பார்க்கிறேன். இதனால் பிரதமர் மோடிக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.