சென்னை: ‘அரசியலுக்கு வந்தால் சேவை செய்யுங்கள், பெருமை பேசாதீர்கள்’ என விஜய்யை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மக்களுக்கு சேவை செய்ய வந்தால், சேவை செய்ய வந்ததாக இருக்கவேண்டும். தவெக தலைவர் விஜய் சினிமாவில் உயர்ந்த நடிகராக உள்ளார். அவருக்கென ஒரு வியாபாரம் இருக்கிறது.
ஆனால் மக்களுக்காக என்னுடைய உச்சத்தை, என்னுடைய வருவாயை விட்டு விட்டு வந்தேன் என்று அவர் அடிக்கடி கூறுவதை கேட்டால், யார் அவரை சினிமாவை விட்டுவிட்டு வரச்சொன்னது? அவ்வாறு பெருமை பேசக்கூடாது. அப்படி சொல்வது ஒரு தலைவனுக்கு அழகல்ல. இவ்வாறு அவர் கூறினார்.