பாட்னா: ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவரும் ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி தங்களின் பிஹார் தேர்தல் திட்டம் குறித்து கூறியதாவது:
பிஹார் தேர்தலில் நாங்கள் போட்டியிட உள்ளோம். இத்தேர்தலில் இண்டியா கூட்டணியில் இணைந்து போட்டியிடுவது குறித்து ஆர்ஜேடி தலைவர் லாலுவுக்கு 2 முறையும் அவரது மகன் தேஜஸ்விக்கு ஒரு முறையும் கடிதம் எழுதினோம். இதுவரை பதில் இல்லை.
6 தொகுதிகளை ஏற்றுக்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம். ஆட்சிக்கு வந்தால் அமைச்சரவையில் இடம் வேண்டாம், சீமாஞ்சல் வளர்ச்சி வாரியம் ஏற்படுத்தினால் போதும் என்று கூறினோம். இவ்வாறு அசாதுதீன் ஓவைசி கூறினார்.