கொல்கத்தா: ஆழமற்ற கடற்பகுதியில் இயங்கும் நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க் கப்பல்களை (ASW-SWC) கொல்கத்தாவின் ‘கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் அண்டு இன்ஜினீயர்ஸ்’ (GRESE) நிறுவனம் கட்டி வருகிறது.
இதில் முதலாவது போர்க் கப்பலான ‘அர்லானா’ கடந்த ஜூன் மாதம் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது. இதையடுத்து இரண்டாவது போர்க் கப்பலை (ஆந்த்ராத்) இந்திய கடற்படையிடம் அந்த நிறுவனம் கடந்த சனிக்கிழமை ஒப்படைத்தது.
லட் சத்தீவு தீவுக்கூட்டத்தில் உள்ள ஆந்த்ராத் தீவிலிருந்து இதற்கான பெயர் பெறப்பட்டுள்ளது. சுமார் 77 மீட்டர் நீளம் கொண்ட இந்தக் கப்பல்கள், டீசல் இன்ஜின்-வாட்டர்ஜெட் கலவையால் இயக்கப்படும் மிகப்பெரிய இந்திய கடற்படை போர்க் கப்பல்களாகும்.