புதுடெல்லி: உத்தர பிரதேசம் லக்னோவில் ராம் மனோகர் லோகியா மருத்துவ அறிவியல் மையத்தின் நிறுவன தின நிகழ்ச்சியில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், ‘‘மருத்துவமனைகளில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் கிடைப்பது, ரத்தம் கிடைப்பது போன்றவை சின்ன சின்ன விஷயங்கள் தான். இதற்கெல்லாம் சரியான நேரத்தில் தீர்வு காணவில்லை என்றால் பெரிய பிரச்சினைகளாக வெடிக்கும். நேபாளத்தில் சமீபத்தில் என்ன நடந்தது என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்’’ என்று தெரிவித்தார்.