மாஸ்கோ: ரஷ்யாவின் காம்சட்காவின் கிழக்கு கடற்கரை அருகே இன்று 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.
அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஷ்யாவின் காம்சட்கா தீபகர்ப்பத்தில் இன்று தீவிர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோளில் இது 7.4 ஆக பதிவாகி உள்ளது. 39.5 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய நேரப்படி இன்று காலை 8.07 மணி நேரத்தில் ரஷ்யாவின் காம்சாட்கா கிழக்குக் கடற்கரை அருகே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 60 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடப்படவில்லை.
அதேநேரத்தில், இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கும் வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளன. அதேநேரத்தில், பெரிய பாதிப்புகள் குறித்த செய்தி ஏதும் இதுவரை வெளியாகிவில்லை.
இதே பகுதியில் கடந்த ஜூலை மாதம் 29ம் தேதி நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவாகி இருந்தது. இதன் காரணமாக, ரஷ்யா, ஜப்பான், ஹவாய் நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.