கொழும்பு: இலங்கையில் தற்போது ஆட்சியில் இருக்கும் தேசிய மக்கள் சக்தி கூட்டணி, தேர்தலுக்கு முன் அளித்த வாக்குறுதியின்படி முன்னாள் அதிபர்களின் சலுகைகளை ரத்து செய்யும் மசோதாவை கொண்டு வந்தது. இந்த மசோதா இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச (80), கொழும்புவில் உள்ள அரசு வீட்டை விட்டு நேற்று வெளியேறினார். ராஜபக்ச கடந்த 2015 முதல் இந்த வீட்டில் வசித்து வந்தார்.
ராஜபக்ச கடந்த 2004 முதல் 2005 வரை பிரதமராகவும் 2005 முதல் 2015 வரை அதிபராகவும் பதவி வகித்தார். பிறகு மீண்டும் 2019 முதல் 2022 வரை பிரதமராக பதவி வகித்தார். அவர் தற்போது அம்பாத்தோட்டை மாவட்டம், தங்கல்ல பகுதியில் இருக்கும் வீட்டில் குடியேறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.