பரமக்குடி: பாமகவிலிருந்து அன்புமணி நீக்கப்பட்டது உட்கட்சி பிரச்சினை என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரன் 68-வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் பாஜக சார்பில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் அக்கட்சியினர் மரியாதை செய்தனர்.
பின்னர், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “தியாகி இமானுவேல் சேகரன் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், சமூக நீதிக்காகவும் போராடியவர். அவரது தியாகத்தை போற்றும் வகையில் அவருக்கு மரியாதை செலுத்த வந்துள்ளோம். இங்கு அரசியல் பேசுவது ஏற்புடையதல்ல. விரும்பவில்லை. பாமகவிலிருந்து அன்புமணி நீக்கப்பட்டது அவர்களது உட்கட்சி பிரச்சினை” என்று கூறினார்.