முனிஷ்காந்த் நாயகனாக நடித்து வரும் படத்துக்கு ‘மிடில் கிளாஸ்’ எனத் தலைப்பிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
முனிஷ்காந்த், விஜயலட்சுமி இணைந்து புதிய படமொன்றில் நடித்து வந்தார்கள். அப்படத்துக்கு ‘மிடில் கிளாஸ்’ எனப் பெயரிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. முழுக்க மிடில் கிளாஸ் நாயகர்களை மையமாக வைத்து இப்படத்தினை உருவாக்கி இருக்கிறது படக்குழு.
ஒவ்வொரு ரூபாய்க்கும் கணக்கு பார்த்து, சின்ன சின்ன விஷயங்களில் சந்தோஷப்பட்டு, வீட்டுக்கடனை விட அதிக சுமையாய் இருக்கும் மாதத்தவணை என மிடில் கிளாஸ் வாழ்க்கையின் யதார்த்தம் பற்றி இப்படம் கதை பேசுகிறது. மிடில் கிளாஸ் தம்பதிகளாக முனிஷ்காந்த் மற்றும் விஜயலட்சுமி நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் காளி வெங்கட், ராதா ரவி, குரேஷி, மாளவிகா அவினாஷ், கோடங்கி வடிவேலு மற்றும் வேல ராமமூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மறைந்த தயாரிப்பாளர் டில்லி பாபு தயாரிப்பில் இப்படம் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கியுள்ள இப்படத்தினை தேவ் மற்றும் கே.வி.துரை இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இதற்கு ஒளிப்பதிவாளராக சுதர்ஷன் ஸ்ரீனிவாசன், இசையமைப்பாளராக ப்ரணவ் முனிராஜ், எடிட்டராக சான் லோகேஷ் ஆகியோர் பணிபுரிந்திருக்கிறார்கள்.