Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, March 13
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»நேபாளத்தில் வன்முறை ஓயாததால் பதற்றம் நீடிப்பு: அரசியல்வாதிகளை குறிவைத்து தாக்குதல்
    உலகம்

    நேபாளத்தில் வன்முறை ஓயாததால் பதற்றம் நீடிப்பு: அரசியல்வாதிகளை குறிவைத்து தாக்குதல்

    adminBy adminSeptember 11, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    நேபாளத்தில் வன்முறை ஓயாததால் பதற்றம் நீடிப்பு: அரசியல்வாதிகளை குறிவைத்து தாக்குதல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    காத்மாண்டு: நே​பாளத்​தில் அரசுக்கு எதி​ராக வெடித்த கலவரத்​தால் பதற்​றம் நீடிக்​கும் நிலை​யில், அரசி​யல்​வா​தி​களை குறி​வைத்து தாக்​குதல்​கள் நடக்​கின்​றன. அங்​குள்ள வணிக வளாகங்​களை இளைஞர்​கள் கும்​பலாகச் சென்று கொள்​ளை​யடித்து வரு​கின்​றனர். பொதுச் சொத்​துகளுக்கு சேதம் விளை​வித்​தது தொடர்​பாக இது​வரை 26 பேரை ராணுவம் கைது செய்​துள்​ளது.

    2008-ல் அண்டை நாடான நேபாளத்​தில் மன்​ன​ராட்சி முடிவுக்கு கொண்​டு​வரப்​பட்​டு, கம்​யூனிஸ்ட் அரசு ஆட்சி அதி​காரத்​தில் இருந்​தது. இந்​நிலை​யில், நேபாளத்​தில் சமூக ஊடகங்​களுக்கு தடை விதிக்​கப்​பட்​டது. இந்த விவ​காரத்​தால் நேபாளத்​தில் அரசி​யல் நெருக்​கடி உச்​சத்தை எட்​டி​யுள்​ளது.

    நேபாள நாட்​டைச் சேர்ந்த ஜென் இசட் இளைஞர்​கள் நடத்​திய தீவிர போராட்​டங்​களால் பிரதமர் கே.பி.சர்மா ஒலி​யின் (73) கம்​யூனிஸ்ட் அரசு கவிழ்ந்​தது. அவருடன் சேர்ந்​து, நாட்​டின் அதிப​ராக இருந்த ராம்​சந்​திர பவுடேலும் ராஜி​னாமா செய்​தார். இதனால் அந்​நாட்​டில் அரசி​யல் குழப்​பம் ஏற்​பட்​டது. நேபாளத்​தில் நிலவி வரும் அரசி​யல் பதற்​ற​மான சூழ்​நிலை காரண​மாக சட்​டம்​-ஒழுங்கு சீர்​குலைந்​துள்​ளது. மேலும், நாட்​டின் தலைநகர் காத்​மாண்டு உட்பட பல்​வேறு பகு​தி​களில் வன்​முறைச் சம்​பவங்​கள் தொடர்​கின்​றனர். சட்​டம்​-ஒழுங்கு சீர்​கெட்​டுள்​ளதைப் பயன்​படுத்தி வன்​முறை கும்​பல்​களைச் சேர்ந்த இளைஞர்​கள் நேபாள நாட்​டின் பல்​வேறு நகரங்​களில் உள்ள வணிக வளாகங்​களுக்​குள் புகுந்​து, டிவி, ஏசி, வாஷிங்​மெஷின், மிக்​ஸி, குளிர்​சாதனப் பெட்​டிகள் உள்​ளிட்ட பொருட்​களைக் கொள்​ளை​யடித்து வரு​கின்​றனர். மேலும், நகரங்​களில் உள்ள பொதுச் சொத்​துகளுக்​கும் அவர்​கள் சேதம் விளை​வித்​தனர்.

    இதற்கு காரண​மானவர்​கள் மீது கடும் நடவடிக்கை எடுக்​கப்​படும் என நேபாள ராணுவம் எச்​சரித்​தது.தொடர்ந்​து, பொதுச் சொத்​துகளுக்கு சேதம் விளை​வித்த வகை​யில் 26 பேரை ராணுவம் நேற்று கைது செய்​துள்​ளது. தலைநகர் காத்​மாண்​டு​வில் கைது செய்​யப்​பட்ட அவர்​களை நேபாள ராணுவத்​தினர் சிறை​யில் அடைத்​துள்​ளனர். கைதான 26 பேரும் காத்​மாண்​டு, பக்​த​பூர் மாவட்​டங்​களைச் சேர்ந்​தவர்​கள் என்​பது தெரிய வந்துள்ளது.

    மாளிகை தீக்கிரை: இதனிடையே, காத்​மாண்​டு​வில் உள்ள சிங்கா அரண்​மனை எனப்​படும் பிர​மாண்​ட​மான அரசு மாளி​கை, இளைஞர்​கள் வைத்த தீயின் காரண​மாக கரு​கியது. அதில் இருந்த விலை உயர்ந்த பொருட்​கள், ஆவணங்​கள் அனைத்​தும் நாச​மா​கின.

    நேபாளத்​தில் அமைதி திரும்​பாத நிலை​யில், பல்​வேறு நகரங்​களில் ஊரடங்கு உத்​தரவு அமலில் உள்​ளது. காத்​மாண்டு முழு​வதும் போலீ​ஸா

    ரும், ராணுவத்​தினரும் குவிக்​கப்​பட்​டு, கண்​காணிப்​புப் பணி​யில் ஈடு​பட்​டுள்​ளனர்​.

    நே​பாளத்​தில் நில​வும் அசா​தாரண சூழலைத் தொடர்ந்​து, காத்​மாண்டு சர்​வ​தேச விமான நிலை​யம் மறுஅறி​விப்பு வரும்​வரை மூடப்​படு​வ​தாக அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இதனால், நேபாளத்​துக்கு சுற்​றுலா மற்​றும் பல்​வேறு காரணங்​களுக்​காக பயணம் மேற்​கொண்ட வெளி​நாட்​டைச் சேர்ந்​தவர்​கள், தங்​களின் நாடு​களுக்​குத் திரும்ப முடி​யாத நிலை ஏற்​பட்​டுள்​ளது.

    நேபாளத்தில் இளைஞர்​கள் ஒன்று திரண்டு அதிபர், பிரதமர், அமைச்​சர்​கள் உள்​ளிட்​டோரின் வீடு​களை குறி​வைத்து தாக்கி வரு​கின்​றனர். பிரதமர் சர்மா ஒலி தனது பதவியை ராஜி​னாமா செய்​து​விட்​டு, ராணுவத்​தின் கட்​டுப்​பாட்​டில் உள்ள பகு​திக்கு ஹெலி​காப்​டரில் தப்​பிச் சென்​றுள்​ளார்.

    முன்​னாள் பிரதமர்​கள் பிரசண்​டா, ஷெர் பகதூர் தேவ்​பா, சாலா​நாத் கனால், அமைச்​சர்​கள், மூத்த அரசி​யல் தலை​வர்​களின் வீடு​களுக்கு போராட்​டக்​காரர்​கள் தீ வைத்​தனர். இதில் ஷெர் பகதூர் தேவ்பா மற்​றும் அவரது மனைவி ஆகியோர் காயங்​களு​டன் தப்​பினர். முன்​னாள் பிரதமர் சாலா​நாத்கனாலின் மனைவி ராஜலட்​சுமி உயிருடன் எரித்​துக் கொல்​லப்​பட்​டார்.

    நேபாள வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த டாக்டர் அர்சு ராணா தேபா (63) கடந்த 4-ம் தேதி அமெரிக்க அரசு வழங்கிய 2 விமானங்களை, ராணுவத்தின் மீட்பு நடவடிக்கைகளுக்கு வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அவரது வீட்டுக்குள் போராட்டக்காரர்கள் புகுந்து தாக்குல் நடத்தினர். இதில் அவருக்கு ரத்த காயம் ஏற்பட்டது. அவர் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது இருந்த போட்டோவும், தாக்குதலுக்குப் பின்னர் ரத்த காயத்துடன் இருக்கும் போட்டோவும் தற்போது வெளியாகியுள்ளது.

    பொதுமக்களுக்கு வேண்டுகோள்: அதிபர் ராம் சந்​திர​பால் போராட்​டத்​தில் ஈடு​பட்ட இளைஞர்​களை சந்​தித்து பிரச்​சினை​களுக்கு தீர்​வு​காண முன்​வந்​துள்​ளார். நாட்​டின் பொதுச் சொத்​துகளுக்கு சேதம் ஏற்​படுத்​தாமல், அமை​தி​யான முறை​யில் பேச்​சு​வார்த்​தைக்கு முன்வர வேண்​டும் என்று அவர்​ நேபாள மக்​களுக்​கு வேண்​டு​கோள்​ விடுத்​துள்​ளார்​.

    இடைக்கால பிரதமர் சுசீலா கார்கி? – நேபாளத்தில் போராட்டம் நடத்தி வரும் இளைஞர்கள் பிரதிநிதியினரை, உச்ச நீதிமன்ற பார் அசோசியேஷன் செயலர் நேற்று சந்தித்துப் பேசினார். 4 மணி நேரம் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது, சுசீலா கார்கியை, இடைக்கால பிரதமராக நியமிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்ததாக பார் அசோசியேஷன் செயலர் தெரிவித்தார். எனவே, நேபாளத்தின் இடைக்கால பிரதமராக சுசீலா கார்கி விரைவில் நியமிக்கப்படலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. சுசீலா கார்க்கி, நேபாளத்திலுள்ள பிராட் நகரில் 1952-ல் பிறந்தார். இவர் தனது முதுநிலை படிப்பை இந்தியாவின் உ.பி. மாநிலம் வாராணசியிலுள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் படித்துள்ளார். அதன் பின்னர் நேபாளத்தின் திரிபுவன் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை படித்துள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    இந்திய வம்சாவளி அதிகாரிகள்: “முழுமையாக இந்தியர்களால் நடத்தப்படுகிறதா?”: கனேடிய தலைவர் அரசாங்க நிறுவனத்தில் இந்திய வம்சாவளி உறுப்பினர்களை அழைத்ததற்காக பின்னடைவை எதிர்கொள்கிறார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 12, 2026
    உலகம்

    பென்சில்வேனியாவில் ஹெச்-1பி விசா மோசடி, ஹெல்த்கேர் ஊழல் போன்றவற்றில் தண்டனை பெற்ற காஷ் படேலைச் சந்தித்ததைப் பற்றி தற்பெருமை காட்டிய இந்திய வம்சாவளி சகோதரர்கள்; 400 ஆண்டுகள் சிறைத்தண்டனை – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 11, 2026
    உலகம்

    இங்கிலாந்தின் வெம்ப்லியில் உள்ள இந்திய கடைகள், உணவகங்கள் இலக்கு தாக்குதல்களில் நாசமாக்கப்பட்டன – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 11, 2026
    உலகம்

    அன்னா லீ வாட்டர்ஸ் யார்? 19 வயதான பிக்கிள்பால் நட்சத்திரம் அடுத்த மாதம் சர்வதேச அறிமுகத்திற்குத் தயாராக உள்ளது – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 11, 2026
    உலகம்

    ‘இந்து விரோதிகளை புண்படுத்த வேண்டாம்’: இந்திய வம்சாவளி பிராண்ட் லட்சுமி சிலையை பேக்கேஜிங்கில் இருந்து அகற்றியது, ஆன்லைனில் பெரும் விமர்சனத்தை எதிர்கொள்கிறது | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 11, 2026
    உலகம்

    ஜார்ஜியா பள்ளி சண்டை கொடியதாக மாறியது: மற்றொரு மாணவனுடன் சண்டையிட்டு 12 வயது சிறுமி மரணம்; வீடியோவைப் பார்க்கவும் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • 14k, 18k மற்றும் 22k தங்கத்தின் வித்தியாசம்? நகைக்கடைக்காரர்கள் எப்போதும் விளக்காதவை இதோ | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • மலாய்கா அரோரா பிங்க் புடவை: கிருத்திகா கம்ரா–கௌரவ் கபூரின் அந்தரங்க திருமணத்தில் ₹2.79 லட்சம் இளஞ்சிவப்பு நிற புடவையில் தலமாக மாறிய மலாய்கா அரோரா | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஹன்சிகா மோத்வானியின் விவாகரத்துக்கு மத்தியில், அவரது முன்னாள் மைத்துனி முஸ்கான் ரகசிய பதிவுகளைப் பகிர்ந்துள்ளார் – என்ன சர்ச்சை? | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இஸ்ரோ, மனிதப் பணிகளுக்கான விண்வெளி மருந்தை உருவாக்க எய்ம்ஸ் பங்குதாரர் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இந்திய வம்சாவளி அதிகாரிகள்: “முழுமையாக இந்தியர்களால் நடத்தப்படுகிறதா?”: கனேடிய தலைவர் அரசாங்க நிறுவனத்தில் இந்திய வம்சாவளி உறுப்பினர்களை அழைத்ததற்காக பின்னடைவை எதிர்கொள்கிறார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • March 2026
    • February 2026
    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.