செல்வராகவன் நடிக்கும் ‘மனிதன் தெய்வமாகலாம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தனுஷ் வெளியிட்டுள்ளார்.
டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் செல்வராகவன் புதிய படமொன்றில் நடித்து வந்தார். இதற்கு ‘மனிதன் தெய்வமாகலாம்’ என்று தலைப்பிட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. இதனை தனுஷ் தனது சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
இயற்கையும் அமைதியும் சூழ்ந்துள்ள ஒரு கிராமத்தில் நிகழும் பெரும் சோகம் அதன் ஒற்றுமையை சிதைக்கிறது. அதனைத் துடைத்தெறிய மக்கள் மனவலிமையில் போராடும் நாயகன், தனது கிராமத்தைக் காப்பாற்ற எடுக்கும் தீர்மானம், அவனை அங்கு தெய்வமாக உயர்த்துகிறது. இதுவே ‘மனிதன் தெய்வமாகலாம்’ படத்தின் கதைக்களமாகும்.
இதில் குஷி ரவி, ஒய்.ஜி.மகேந்திரன், மைம் கோபி, கெளசல்யா, சதீஷ், லிர்திகா உள்ளிட்ட பலர் செல்வராகவனுடன் நடித்துள்ளனர். இதற்கு ஒளிப்பதிவாளராக ரவி வர்மா கே, எடிட்டராக தீபக் எஸ், இசையமைப்பாளராக ஏ.கே.பிரியன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.