கள்ளக்குறிச்சி: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அதிமுக பொதுச் செயலா ளர் பழனிசாமி ஆகியோரின் பிறந்த நாளையொட்டி 5,371 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருக்கோவிலூரில் கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் குமரகுரு தலைமை யில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பழனிசாமி பேசியதாவது:
தமிழகம் முழுவதும் 139 தொகுதிகளில் சுற்றிவந்து 60 லட்சம் மக்களை சந்தித்துள்ளேன். தற்போது திருக்கோவிலூர் மற்றும் ரிஷிவந்தியம் ஆகிய இரு தொகுதி மக்கள் இங்கு திரண்டு வந்திருப்பதை, ஆட்சி மாற்றத்திற்கான அறிகுறியாகவே நான் பார்க்கிறேன். இன்று தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தை உருவாக்கிய கையோடு, அரசு மருத்துவக் கல்லூரியை அமைத்துக் கொடுத்தது அதிமுக ஆட்சி. ஆனால் அதை முறையாக பராமரிக்காமல் போதிய மருத்து வர்களை நியமிக்காமல் மக்களை வஞ்சிக்கின்றனர். முன்னாள் அமைச்சர் ஒருவர் பெண்களை ஏளனமாகப் பேசினார். அவருக்கு ஆண்டவன் உரிய தண்டனை வழங்கிவிட்டார்.
திமுகவினர் சமூகநீதி பற்றி வாய் கிழிய பேசுவார்கள். திண்டிவனம் நகராட்சியில் பட்டியலினத்தைச் சேர்ந்த அரசு அலுவலர், கவுன்சிலரின் காலில் விழந்து கதறும் சம்பவத்தை அனைவரும் பார்த்திருப்பீர்கள். இதுதான் திமுகவின் சமூக நீதி.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக ஆம்புலன் ஸில் செல்லும் நிலையில் உள்ளது; தற்போது ஐசியுவில் உள்ளது என ஆணவத்தோடு பேசியிருக்கிறார். உங்கள் தந்தை வெளிநாடு செல்லும் ரகசியத்தை சொன்னால் நீங்கள் தாங்க மாட்டீர்கள். எனவே உதயநிதி நிதானத்தோடு பேச வேண்டும்.
அதிமுக ஒருபோதும் ஆம்புலன்ஸில் செல்லும் நிலை ஏற்படாது. ஆனால் மக்கள் உங்களை 2026-ல் ஆம்புலன்ஸில் அனுப்பி வைப்பார்கள். அதற்கான நேரம் வந்துவிட்டது. வென்டிலேட்டரில் வைக்கப்பட் டுள்ள நிலையில்தான் எஞ்சி யுள்ள 7 மாத திமுக ஆட்சி இருக்கும். 2026-ல் வென்டிலேட்டர் அகற்றப்பட்டால் ஆம்புலன்ஸில் தான் செல்ல வேண்டும் என்றார்.