ஸ்ரீநகர்: தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள குட்டார் வனப் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்தனர்.
இதில் பாதுகாப்பு படையினர் – தீவிரவாதிகள் இடையே மோதல் ஏற்பட்டது. லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
அதேவேளையில் பாதுகாப்பு படை தரப்பில் 3 வீரர்கள் காயம் அடைந்தனர். இவர்களில் இருவர் பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இறந்த தீவிரவாதிகளில் ஒருவர் உள்ளூரை சேர்ந்தவர், மற்றொருவர் வெளிநாட்டவர்
என்று தெரியவந்துள்ளது.