சென்னை: அண்ணாவின் 117-வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரின் உருவச் சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி மரியாதை செலுத்துகிறார்.
இது தொடர்பாக, அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அண்ணாவின் 117-வது பிறந்தநாள் விழா அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலை அமைவிடத்தில் வரும் செப்.15-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பங்கேற்று மலர்கள் தூவி மரியாதை செலுத்த உள்ளார். அவரைத் தொடர்ந்து, தலைமைக்கழகச் செயலாளர்களும் மரியாதை செலுத்த உள்ளனர்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட செயலாளர்கள், கட்சி எம்பிக்கள், எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்பிக்கள், எம்எல்ஏக்கள், சட்டப் பேரவை உறுப்பினர்கள், எம்ஜிஆர் மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்ஜிஆர் இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம்.
வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்புசாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு, வர்த்தக அணி மற்றும் கலைப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், தொண்டர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.