திருமலை: சந்திர கிரகணத்தையொட்டி பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை நேற்று பிற்பகல் 3:30 மணிக்கு சாத்தப்பட்டது. சந்திர கிரகணம் நேற்று இரவு 9.50 மணி முதல் திங்கட்கிழமை அதிகாலை 1.31 மணி வரை நடைபெற்றது. இது இந்தியா முழுவதும் காணப்பட்டது.
சந்திர கிரகணத்தையொட்டி பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை நேற்று மதியம் 3.30 மணி அளவில் சாத்தப்பட்டது. அதன் பின்னர் முழு சந்திர கிரகணம் நிறைவு அடைந்ததை தொடர்ந்து, அதிகாலை கோயில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு 3 மணிக்கு சுப்ரபாத சேவையை தொடர்ந்து பக்தர்கள் வழக்கம்போல் சுவாமி தரிசனம் செய்தனர்.
இது தொடர்பாக அறங்காவலர் குழு தலைவர் பிஆர் நாயுடு நேற்று பேசியதாவது: சந்திர கிரகணத்தையொட்டி ஆகம விதிகளின்படி திருப்பதி ஏழுமலையான் கோயில் உட்பட திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான அனைத்து கோயில்களிலும் நடை சாத்தப்பட்டது. திருமலையில் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸில் உள்ள பக்தர்களுக்கு மட்டுமின்றி, வெளியே திருமலையில் சுமார் 50,000 புளியோதரை பாக்கெட்டுகள் மற்றும் தண்ணீர் போன்றவை பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. திங்கட்கிழமை அதிகாலை 3 மணி முதல் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு வழக்கம் போல் அனுமதிக்கப்படுவர் என தெரிவித்தார்.