புதுடெல்லி: ஐ.நா. சபை கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க மறுத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
ஐநா சபையின் 80-வது பொதுச்சபைக் கூட்டம் வரும் 9-ம் தேதி நியூயார்க்கில் தொடங் குகிறது. கூட்டத்தொடரில் உயர் மட்ட பொது விவாதம் செப்டம் பர் 23 முதல் செப் 29 வரை நடைபெறவுள்ளது. இந்தக் கூட் டத்தின்போது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 23-ம் தேதி பேச உள்ளார்.
முன்னதாக ஐ.நா. சபைக் கூட் டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருப்பதாக கூறப்பட் டது. ஆனால் தற்போது இந்தியா வுக்கு 50% வரி விதிக்கப்பட்டுள் ளதால் அமெரிக்காவுடன் ஏற் பட்ட மோதல் காரணமாக பிரதமர் மோடி அமெரிக்கா செல்ல மாட் டார் என தெரியவந்துள்ளது.
பிரதமர் மோடிக்கு பதில் இந் திய அரசு சார்பில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் பங்கேற்பார் என எதிர் பார்க்கப்படுகிறது. தற்போதுள்ள நிலைப்பாட்டின் படி இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பது உறுதிசெய்யப் படவில்லை. மேலும், பிரதமர் மோடி கூட்டத்தை புறக்கணிக்க முடிவு எடுத்துள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கின் றன.அதாவது, பிரதமரின் பயணத் திட்ட அட்டவணையில் தற்போது வரை ஐ.நா. சபை பொதுக் கூட்டம் இடம்பெறவில்லை.
பிரதமர் மோடி நியூயார்க் பயணம் மேற்கொண்டால் அதிபர் ட்ரம்பை சந்திக்கும் நிலை உரு வாகும். இந்த சந்திப்பை தவிர்ப் பது நல்லது என்று மத்திய அரசு கருதுகிறது. விரைவில் அமெரிக்கா செல்ல உள்ள அமைச்சர் ஜெய்சங்கர் செப்டம் பர் 26-ம் தேதி உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.