சென்னை: புச்சிபாபு கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் பிரெஸிடெண்ட் லெவன் ஹைதராபாத் அணிகள் மோதின. 4 நாட்கள் கொண்ட இந்த ஆட்டம் சென்னை நாவலூரில் உள்ள சிஎஸ்கே உயர் செயல்திறன் மையத்தில் நேற்று தொடங்கியது.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 90 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு இழப்புக்கு 296 296 ரன்கள் ரன்கள் குவித்தது.
அமன் ராவ் 98 பந்துகளில், 11 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 85 ரன்களும், ஹிமா தேஜா 221 பந்துகளில், ஒரு சிக்ஸர், 13 பவுண்டரிகளுடன் 97 ரன்களும் விளாசி ஆட்டமிழந்தனர். ராகுல் சிங் 38, நிதிஷ் ரெட்டி 21, ராகுல் ராதேஷ் 2 ரன்களில் வெளியேறினர். வருண் கவுட் 45 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். டிஎன்சிஏ பிரெஸிடெண்ட் லெவன் அணி சார்பில் திரிலோக் நாக் 3 விக்கெட்கள் கைப்பற்றினார். இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.