‘லெவன்’ இயக்குநர் தனது அடுத்த படத்தினை இறுதிச் செய்திருக்கிறார்.
எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியாகி, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற படம் ‘லெவன்’. மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளில் இப்படத்துக்கு 4 வாரங்களாக மக்கள் கூட்டம் இருந்தது. மேலும், ஓடிடி தளத்திலும் இப்படத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்தது.
இந்த வரவேற்பின் மூலம் ‘லெவன்’ இயக்குநரான லோகேஷ் அஜில்ஸின் அடுத்த படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவானது. பல்வேறு தயாரிப்பாளர்கள் அவரை அணுகிவந்தார்கள். இறுதியாக ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரிக்கும் படத்தினை இயக்க முடிவு செய்திருக்கிறார் லோகேஷ் அஜில்ஸ். தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் இப்படம் உருவாகிறது. இதன் படக்குழுவினர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.
லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா, ரியா ஹரி, திலீபன், அபிராமி, ருத்விகா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘லெவன்’. இமான் இசையமைப்பில் உருவான இப்படத்தினை ஏ.ஆர் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருந்தது.