எப்போதுமே சூப்பர் ஸ்டார் ரஜினி சார் மட்டுமே என்று சிவகார்த்திகேயன் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘மதராஸி’. இப்படத்தினை சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் சிவகார்த்திகேயன், ருக்மணி, அனிருத் உள்ளிட்டோர் கண்டுகளித்தனர். படம் முடிந்து வெளியே வந்த சிவகார்த்திகேயன் பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசினார்.
அப்போது சிவகார்த்திகேயன், “மக்களோடு படத்தைப் பார்த்தேன். அனைவருக்கும் படம் பிடித்திருக்கிறது. ஏ.ஆர்.முருகதாஸ் சார் இயக்கத்தில் ஒரு ஆக்ஷன் கதை அவ்வளவே. மக்கள் எந்தக் காட்சியை எல்லாம் ரசிக்கிறார்கள் என்பதை பார்க்கவே நானும், அனிருத்தும் திரையரங்கிற்கு வந்து பார்த்தோம். நாங்கள் எதிர்பார்த்த அனைத்து காட்சியிலும் மக்கள் கைதட்டி ரசித்தார்கள். எனக்கொரு ஆக்ஷன் படமாக இது இருக்கும் என்று தான் நடித்தேன்” என்று பேசினார். பின்பு ‘சூப்பர் ஸ்டார்’ பட்டம் குறித்த கேள்விக்கு “எப்போதுமே சூப்பர் ஸ்டார் ரஜினி சார் மட்டுமே” என்று பதிலளித்தார் சிவகார்த்திகேயன்.
அதனைத் தொடர்ந்து ‘கோட்’ படத்தில் விஜய்யை துப்பாக்கியைக் கொடுத்த காட்சி குறித்த கேள்விக்கு “’கோட்’ படத்தில் விஜய் என்னிடம் துப்பாக்கியைக் கொடுத்த காட்சியை மறக்க முடியாது. இந்தக் கதையும் துப்பாக்கியை பற்றிய கதை தான்” என்று பதிலளித்துள்ளார் சிவகார்த்திகேயன்.