நரசாபுரம்: ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள நரசாபுரம், தூர்ப்பு தூள்ளு கிராமத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை விநாயகர் சிலைகளை ஏரியில் கரைக்க டிராக்டரில் ஊர்வலமாக கொண்டு சென்றனர்.
வழியில் டிராக்டரை டிரைவர் ஓரமாக நிறுத்திவிட்டு தண்ணீர் குடிக்கச் சென்றார். அப்போது கூட்டத்தில் இருந்த ஒரு சிறுவன் டிராக்டரில் ஏறி அதை ஓட்ட முயன்றார். இதில் டிராக்டர் தாறுமாறாக ஓடி 4 பேர் மீது ஏறி இறங்கியதில் நால்வரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுபோல் அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் கார் புகுந்ததில் 2 பக்தர்கள் உயிரிழந்தனர். 4 பேர் காயம் அடைந்தனர்.