Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, February 3
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 200-க்கும் மேற்பட்டோர் பலி
    உலகம்

    ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 200-க்கும் மேற்பட்டோர் பலி

    adminBy adminSeptember 1, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 200-க்கும் மேற்பட்டோர் பலி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    காபூல்: ஆப்கானிஸ்தானில் இன்று (திங்கள்கிழமை) காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 200-க்கும் அதிகமானோர் பலியாகினர். 400-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனையடுத்து அங்கு மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

    ஆப்கானிஸ்தானின் நாங்கர்ஹர் மாகாணத்தில் ஜலாலாபாத் எனுமிடத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலநடுக்கங்கள் குறித்த அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முதலில் 6.3 ரிக்டர் அளவிலும், பின்னர் 4.7 ரிக்டர் அளவிலும் இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.

    கடந்த 2023-ம் ஆண்டுக்குப் பின்னர் ஆப்கனில் ஏற்பட்டுள்ள மிக மோசமான நிலநடுக்கமாக இது உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக இப்பகுதியில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது 4000 பேர் வரை உயிரிழந்ததாக தலிபான் அரசு தெரிவித்தது. ஆனால் ஐ.நா சபையோ 1500 பேர் உயிரிழந்தனர் எனத் தெரிவித்தது.

    இந்நிலையில் இன்றைய நிலநடுக்கத்தில் இதுவரை 200-க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக தகவல்கள் வருகின்றன. இந்த பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.

    இதற்கிடையில், தலிபான் அரசின் சுகாதாரத் துறை செய்தித் தொடர்பாளர் ஷராஃபத் ஜமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “250 பேர் உயிரிழந்தது உறுதியாகியுள்ளது. இன்னும் பலி எண்ணிக்கை அதிகமாகலாம். கட்டிட இடிபாடுகள் உள்ள பகுதிகளுக்கு மீட்புக் குழுவினர் செல்வதில் சிக்கல் நிலவுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

    ஆப்கானிஸ்தான் நாடானது நிலநடுக்கங்கள் ஏற்படக் கூடிய பகுதியில் உள்ளது. அதுவும் குறிப்பாக அங்குள்ள இந்துகுஷ் மலைகளானது இந்தியா மற்று யூரேஸியா டெக்டானிக் தகடுகள் இணையும் இடத்தில் உள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    ‘பஞ்சாபி டெவில்ஸ்’ பைக் கும்பல் நிறுவனர் ஜஷன்ப்ரீத் அமெரிக்காவில் சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்த வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்டார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 3, 2026
    உலகம்

    ஜெஃப்ரி எப்ஸ்டீனுக்கு ‘ரகசிய மகன்’ இருக்கிறாரா? வெடிக்கும் DOJ மின்னஞ்சல்கள் அவர் ‘ஆண் குழந்தைக்காக’ வாழ்த்தப்பட்டதைக் காட்டுகின்றன | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 3, 2026
    உலகம்

    வினோதமான ‘ஹாட்னஸ் தரவரிசை’ கோரிக்கைகளை முன்னாள் ஊழியர்கள் குற்றம் சாட்டியதை அடுத்து GOP பிரதிநிதி நான்சி மேஸ் தீக்குளித்தார் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 3, 2026
    உலகம்

    ‘நீங்கள் ஏன் இங்கே இருக்கிறீர்கள்?’: இந்திய வம்சாவளி இனப் பாகுபாடு ஆணையர் ஆஸ்திரேலியாவை ‘திருடப்பட்ட நிலம்’ என்று அழைத்தார், பின்னடைவை எதிர்கொள்கிறார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 2, 2026
    உலகம்

    ட்ரெவர் நோவா கிராமி மேடையில் உள் வர்த்தகத்தை ஒப்புக்கொண்டாரா? ‘உருளைக்கிழங்கு’ ஜோக் விளக்கப்பட்டது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 2, 2026
    உலகம்

    McCaughey septuplets: ஒன்றாகப் பிறந்த உலகின் முதல் ஏழு குழந்தைகள்; அவர்கள் இப்போது எங்கே? | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ‘SpaceX மற்றும் xAI ஆகியவை இப்போது ஒரு நிறுவனமாக உள்ளன’: AI மற்றும் விண்வெளிக்கு இணைப்பு என்ன அர்த்தம் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • தாய்மை பற்றிய ஆலியா பட்: ஒரு பெற்றோராக மாறுவது எப்படி பாதுகாப்பு, வேலை மற்றும் பச்சாதாபம் பற்றிய தனது பார்வையை மாற்றியது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘SpaceX மற்றும் xAI ஆகியவை இப்போது ஒரு நிறுவனமாக உள்ளன’: AI மற்றும் விண்வெளிக்கு இணைப்பு என்ன அர்த்தம் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • வெள்ளை மற்றும் சாம்பல் நிறத்திற்கு அப்பால்: குறைந்தபட்ச வீடுகளின் தோற்றத்தை வண்ணங்கள் எவ்வாறு உயர்த்தும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • கோடிக்கணக்கான மக்களைக் காணவில்லையா? முன்னர் மதிப்பிடப்பட்டதை விட மனிதர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்று ஆய்வு கண்டறிந்துள்ளது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • February 2026
    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.