சென்னை: தமிழக அரசுப் பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மைக் குழுக்களின் (எஸ்எம்சி) குழு உறுப்பினர்களின் வருகையை பதிவு செய்யும் முறையில் சில மாற்றங்களை பள்ளிக்கல்வித் துறை செய்துள்ளது.
அதன்படி, வருகைப் பதிவு செயலியில், கூட்டத்தில் பங்கேற்றவர், பங்கேற்காதவர் ஆகியவற்றுடன் கூடுதலாக ‘காலியிடம்’ என்ற பிரிவும் சேர்க்கப்பட்டுள்ளது.
தற்போது உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக் காலம் முடிவடைந்துள்ளதால், கூட்டத்தில் அவர்கள் பங்கேற்க தேவையில்லை. ஒருவேளை, அவர்கள் விரும்பினால் கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கலாம். ஆனால், அவர்களின் வருகையை பதிவு செய்ய வேண்டாம். அதற்கு மாறாக, செயலியில் காலியிடம் என்று குறிப்பிட வேண்டும். அதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதை பின்பற்றுமாறு தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.