Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, March 18
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»உதவிப் பொருட்களுடன் பார்சிலோனாவில் இருந்து காசா புறப்பட்ட படகுகள்: பயணத்தில் இணைந்த கிரெட்டா தன்பெர்க்
    உலகம்

    உதவிப் பொருட்களுடன் பார்சிலோனாவில் இருந்து காசா புறப்பட்ட படகுகள்: பயணத்தில் இணைந்த கிரெட்டா தன்பெர்க்

    adminBy adminAugust 31, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    உதவிப் பொருட்களுடன் பார்சிலோனாவில் இருந்து காசா புறப்பட்ட படகுகள்: பயணத்தில் இணைந்த கிரெட்டா தன்பெர்க்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    பார்சிலோனா: பாலஸ்தீனத்தின் காசா பகுதி வாழ் மக்களுக்கு வேண்டிய நிவாரண உதவி பொருட்களுடன் பார்சிலோனாவில் இருந்து ஞாயிற்றுக்கிழமை அன்று பல்வேறு படகுகள் புறப்பட்டன. இந்த பயணத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பெர்க் இணைந்துள்ளார்.

    இஸ்ரேல் கடற்படையின் தடையை தகர்த்து காசா மக்களுக்கு உதவுவது இந்த பயணத்தின் நோக்கமாக அமைந்துள்ளது. இந்த பயணம் பார்சிலோனாவில் தொடங்கிய போது ஆயிர கணக்கான மக்கள் திரண்டு, காசா புறப்பட்ட படகுகளை வழியனுப்பி வைத்தனர். அப்போது பாலஸ்தீன கொடிகளை கையில் ஏந்தியிருந்த அவர்கள், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக ‘இது யுத்தம் அல்ல; இது இனப்படுகொலை’ முழக்கமிட்டனர்.

    “சர்வதேச சட்டத்தை நிலைநிறுத்த தவறியது, வன்முறை, வணிக ரீதியாக செயல்படும் சர்வதேச அமைப்புக்கு சவாலாக இந்த பயணத்தின் பணி உள்ளது” என கிரெட்டா தன்பெர்க் பயணத்துக்கு முன்னதாக தெரிவித்திருந்தார்.

    இந்த படகு பயணத்தில் கிரீஸ், இத்தாலி, துனிசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் நிவாரண உதவிப் பொருட்களுடன் மேலும் சில படகுகள் இணைய உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் மற்றும் தன்னார்வலர்கள் இடமிருந்து இந்த நிவாரண பொருட்கள் பெறப்பட்டுள்ளது.

    கடந்த ஜூன் மாதம் காசாவுக்கு நிவாரண பொருட்களுடன் கிரெட்டா தன்பெர்க் உள்ளிட்ட சில செயல்பாட்டாளர்கள் படகு பயணம் மேற்கொண்டனர். அப்போது அந்த படகுகளை இடைமறித்த இஸ்ரேல் படை, அவர்களை நாடு கடத்தியது. இஸ்ரேலின் இந்த செயலுக்கு உலக நாடுகள் சில கண்டனம் தெரிவித்தன.

    ஹமாஸ் படையினரின் ஆயுத கடத்தலை தடுக்கும் வகையில் கடல் பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்னதாக இந்த தடுப்பு நடவடிக்கையை முன்னெடுத்தாக இஸ்ரேல் கடந்த ஜூன் மாதம் வாதிட்டது. ஹமாஸுக்கு ஆதரவான பல்வேறு முயற்சிகளை தங்கள் படை தகர்த்து வருவதாக இஸ்ரேல் அப்போது கூறியிருந்தது.

    கடந்த 2023 அக்டோபரில் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலில் நடத்திய தாக்குதலால் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்புக்கு இடையிலான மோதலை மிக தீவிரமாக்கியது. அதற்கடுத்த இந்த 22 மாதத்தில் மட்டும் இஸ்ரேல் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கை காரணமாக பாலஸ்தீனத்தை சேர்ந்த சுமார் 63,000 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    காசாவில் தினசரி ஐந்தில் ஒரு வீட்டிலும், மூன்றில் ஒரு குழந்தையிடமும், ஒவ்வொரு பத்தாயிரம் பேரில் இருவர் என பசி காரணமாகவும், ஊட்டச்சத்து குறைபாடு காரணமாகவும் உயிரிழப்பதாக தகவல். காசாவில் உணவு பஞ்சம் நிலவுவதை ஐ.நா அண்மையில் அறிவித்திருந்தது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    ‘காவல்துறை உதவ மறுத்து விட்டது’: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சீக்கிய உணவக உரிமையாளர் ஹர்மன் கபூர் ‘ஹலால்’ வரிசைக்கு மத்தியில் வெளியான பிறகு பேசுகிறார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 18, 2026
    உலகம்

    இந்தியர்கள் ஐரிஷ் வீடுகளை வாங்குகிறார்கள்: இந்தியாவை விட்டு வெளியேறிய பிறகு வாழ்க்கைத் தரம் மேம்பட்டதாக அமேசான் தொழில்நுட்ப வல்லுநர் கூறுகிறார், இணையம் பதிலளிக்கிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 18, 2026
    உலகம்

    ஆஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளி வண்டி ஓட்டுநர் குயின்ஸ்லாந்து காவல்துறை மீது இனவெறி குறிவைத்ததற்காக வழக்குத் தொடர்ந்தார்: அநாகரீகமான செயலின் தவறான குற்றச்சாட்டு, இந்தியர்களை வக்கிரம் என்று போலீசார் அழைத்தனர் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 17, 2026
    உலகம்

    கொலையில் இருந்து தப்பிப்பது எப்படி: கணவருக்கு விஷம் கொடுத்து சிக்கிய ஆசிரியர் | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 17, 2026
    உலகம்

    ‘H-1Bs கொண்டு வருவதை நிறுத்து’: வெளிநாட்டவர்கள் 78,000 அமெரிக்க வீடுகளை வாங்க $56 பில்லியன் செலவழித்ததால் MAGA வெடித்தது | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 17, 2026
    உலகம்

    டப்மினில் இந்தியன்: ‘நான் ஒரு புல்லரிப்பு அல்ல’: டப்ளினில் உள்ள இந்தியர், பேருந்தில் பெண்ணை துரத்தியதற்காக தண்டிக்கப்பட்டவர், பின்னணி சோதனை காரணமாக தனக்கு வேலை கிடைக்கவில்லை என்று கூறுகிறார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கத்தார் ஏர்வேஸ் பயணப் புதுப்பிப்பு: ஏப்ரல் 30 வரை இலவச தேதி மாற்றங்கள் அல்லது பணத்தைத் திரும்பப் பெறலாம்; மார்ச் 28 வரை 9 இந்திய நகரங்களுக்கு விமானங்கள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • நீங்கள் உடற்பயிற்சி செய்வது போல் உணராமல் சுறுசுறுப்பாக இருக்க 7 வேடிக்கையான வழிகள்
    • உங்கள் திரைச்சீலைகளை எவ்வளவு அடிக்கடி கழுவ வேண்டும்? பதில் உங்களை ஆச்சரியப்படுத்தலாம் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பிக் பேங்: பிக் பேங்கிற்கு முன் என்ன வந்தது? எல்லாவற்றிற்கும் முன்பு இருந்ததை இறுதியாக கண்டுபிடித்ததாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • விமான அளவிலான சிறுகோள் 2026 FB: நாசா எச்சரிக்கிறது: விமானம் அளவிலான சிறுகோள் 2026 FB இன்று பூமியை 34,000 மைல் வேகத்தில் பெரிதாக்குகிறது; அடுத்து என்ன நடக்கலாம் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • March 2026
    • February 2026
    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.