சூரிச்: சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் டைமண்ட் லீக் இறுதிப் போட்டி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதில் ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் வென்ற இந்தியாவின் நீரஜ் சோப்ரா 85.01 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து 2-வது இடம் பிடித்தார். டைமண்ட் லீக் இறுதிப் போட்டியில் நீரஜ் சோப்ரா 2-வது இடத்தை பிடிப்பது இது 3-வது முறையாகும். 2022-ம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற அவர், 2023 மற்றும் 2024-ம் ஆண்டுகளில் 2-வது இடம் பிடித்திருந்தார்.
ஜெர்மனியின் ஜூலியன் வெபர் தனது 2-வது முயற்சியில் 91.57 மீட்டர் தூரம் எறிந்து முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்றார். முன்னதாக அவர், முதல் முயற்சியில் 91.37 மீட்டர் தூரம் எறிந்து அசத்தியிருந்தார்.