செப்டம்பர் 12-ம் தேதி ‘பிளாக்மெயில்’ படம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருக்கிறது.
மாறன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பிளாக்மெயில்’. ஆகஸ்ட் 1-ம் தேதி வெளியீடு என்று அறிவிக்கப்பட்ட இப்படம் திட்டமிட்டப்படி வெளியாகவில்லை. இதனால் இதன் வெளியீடு எப்போது என்பது தெரியாமல் இருந்தது. தற்போது இப்படம் செப்டம்பர் 12-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் தமிழக உரிமையில் தனஞ்ஜெயன் கைப்பற்றி வெளியிடவுள்ளார். இதற்கான விளம்பரப்படுத்தும் பணிகள் விரைவில் துவங்கவுள்ளன. இந்த முறை எந்தவித தடங்கலுமின்றி படம் வெளியாகும் என்று உறுதிப்படுத்தி இருக்கிறது படக்குழு.
மு.மாறன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், ஸ்ரீகாந்த், ரமேஷ் திலக், தேஜு அஸ்வினி, பிந்து மாதவி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பிளாக்மெயில்’. சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இப்படத்தின் ட்ரெய்லருக்கும் இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.