Last Updated : 27 Aug, 2025 06:08 AM
Published : 27 Aug 2025 06:08 AM
Last Updated : 27 Aug 2025 06:08 AM

மதுரை: உடல்நலக் குறைவு காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அமைச்சர் ஐ.பெரியசாமி அனுமதிக்கப்பட்டுள்ளார். திமுகவின் மூத்த அமைச்சர்களில் ஒருவர் திண்டுக்கல் ஐ.பெரியசாமி. உடல்நலக் குறைவு காரணமாக மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத் தரப்பில் கூறும்போது, “அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு வயிற்று வலி உள்ளிட்ட சிறு உடல் உபாதைகளுக்காக 2 நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் அடிப்படையில், அமைச்சருக்கு மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது அவர் நலமாக உள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
FOLLOW US
தவறவிடாதீர்!