குழந்தைகளை கவரும் விதமாக தயாராகும் படம், ‘அழகர் யானை’. இதில் புகழ், ஹீரோவாக நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் விஸ்மியா, நந்தினி, ஆர்யன், ஆடுகளம் முருகதாஸ், குழந்தை நட்சத்திரங்கள் காருண்யா, கோகுல் நடிக்கின்றனர்.
80 அடி உயர யானை ஒன்றும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறது . ஸ்ரீகாந்த் தேவா இசை அமைக்கிறார். சபா குமார் ஒளிப்பதிவு செய்கிறார். எஸ்வி புரொடக்ஷன்ஸ் சார்பில் சிவசங்கர் தயாரிக்கும் இந்தப் படத்தை மங்களேஷ்வரன் இயக்குகிறார்.
படம் பற்றி அவர் கூறும்போது, “இன்றைய சூழலில் மனோரீதியாக நாம் ஒருவருக்கு தரும் நம்பிக்கை மிக அவசியமாக இருக்கிறது. அப்படி ஒரு நம்பிக்கையை தரும் விதமாக இந்தப் படம் உருவாகிறது. எம்.ஜி.ஆரின் நல்ல நேரம், ரஜினியின் ‘அன்னை ஓர் ஆலயம்’, கமலின் ‘ராம் லட்சுமண்’ படங்களைப் போல யானையை மையப்படுத்தி குழந்தைகள் ரசிக்கும் விதமாக இது உருவாகிறது. மலை அடிவாரத்தில் உள்ள கிராமம் ஒன்றில் இதன் கதை நடக்கிறது. இதன் படப்பிடிப்பு கிருஷ்ணகிரி, கேரளாவில் நடைபெறும்” என்றார். இதன் பூஜை சமீபத்தில் நடைபெற்றது.