ஷிம்கென்ட்: கஜகஸ்தானின் ஷிம்கென்ட் நகரில் ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற மகளிருக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் சிப்ட் கவுர் சம்ரா, சீனா வின் யாங் யுஜியை எதிர்த்து விளையாடினார்.
இதில் சிப்ட் கவுர் சம்ரா 459.2 புள்ளிகளை குவித்து தங்கப் பதக்கம் வென்றார். யாங் யுஜி 458.8 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் பெற்றார். ஜப்பானின் நோபாடா மிசாகி 448.2 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.
மகளிருக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் அணிகள் பிரிவில் சிப்ட் கவுர் சம்ரா, அஞ்சும் மவுத்கில், அஷி சவுஸ்கி ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி 1,753 புள்ளிகளை குவித்து தங்கப் பதக்கம் வென்றது.