புதுடெல்லி: இந்திய-ஜெர்மனி சேம்பர் ஆப் காமர்ஸ் சார்பில் டெல்லியில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கில் இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் ஜார்ஜ் என்ஸ்வீலர் பேசியதாவது: மாறிவரும் உலகளாவிய புவிசார் அரசியலுக்கு மத்தியில் இந்தியாவும் ஜெர்மனியும் தங்கள் இருதரப்பு உறவுகளை ஆழப்படுத்தி வருகின்றன.
மேலும் இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA) ஏற்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த ஆண்டு இறுதிக்குள் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட வாய்ப்பு உள்ளது. இது வர்த்தகம், பசுமை எரிசக்தி மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை அதிகரிக்கும்.
இந்தியாவோ ஐரோப்பிய ஒன்றியமோ அல்லது அமெரிக்காவோ எந்த ஒரு நாடும் பிற நாடுகளின் பொருட்கள் மீது கூடுதல் வரி விதித்தால் அது சுதந்திரமான வர்த்தகத்துக்கு தடையாக இருக்கும். எனவே, உலகளாவிய வர்த்தகத்தை மென்மையாக்க குறைவான அளவில் வரி விதிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.