தேஜா சஜ்ஜா, அம்ரிதா ஐயர் உள்பட பலர் நடிப்பில் வெளியான படம், ‘ஹனு-மன்’. பிரசாந்த் வர்மா இயக்கிய இந்தப் படம், தமிழ் தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
இதையடுத்து தேஜா சஜ்ஜா ஹீரோவாக நடிக்கும் படம், ‘மிராய்’. கார்த்திக் கட்டமனேனி இயக்கியுள்ள இது, செப்.5-ல் வெளியாகிறது. இதில், சூப்பர்யோதாவாக தேஜா சஜ்ஜா நடிக்கிறார். பீப்பிள் மீடியா ஃபேக்டரி சார்பில் டி.ஜி. விஸ்வ பிரசாத், கிருத்தி பிரசாத் தயாரிக்கின்றனர்.
இந்நிலையில் தேஜா சஜ்ஜாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய புதிய படத்தின் கான்செப்ட் போஸ்டரை, பீப்பிள் மீடியா ஃபேக்டரி வெளியிட்டுள்ளது. ‘மிராய்’ படத்துக்குப் பிறகு இன்னும் பெயரிடப்படாத புதிய படத்தில் தேஜா சஜ்ஜாவுடன் இந்நிறுவனம் மீண்டும் இணைகிறது. பெரிய பட்ஜெட்டில், உயர்தரமான தொழில்நுட்ப அம்சங்களுடன் உருவாக இருக்கும் இந்த பான்-இந்தியா திரைப்படம், 2027-ம்
ஆண்டு பொங்கலுக்கு வெளியாகிறது. மற்ற விவரங்கள் அறிவிக்கப்படவில்லை. இது சயின்ஸ் பிக்ஷன் கதை என்று கூறப்படுகிறது.