ராஞ்சி: ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் மாநில தண்டனை மறுஆய்வு வாரிய கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் மாநிலத்தின் பல்வேறு சிறைகளில் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் 51 கைதிகளை விடுவிக்க முதல்வர் ஒப்புதல் அளித்தார்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “கடந்த 2019 முதல் 619 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 470 பேர் பல்வேறு சமூக நலத் திட்டங்களின் பலன்களைப் பெறுகின்றனர். தற்போது விடுவிக்கப்படும் கைதிகளின் குடும்பப் பின்னணியை ஆய்வு செய்து அவர்களின் வாழ்வாதாரத்துக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் சமூக நலத்திட்டப் பலன்களை உறுதி செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார்” என்றார்.