‘மெட்ராஸ் மேட்னி’ படத்தைப் பார்த்துவிட்டு படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டியிருக்கிறார் சிவகார்த்திகேயன்.
ஜூன் 6-ம் தேதி வெளியான படம் ‘மெட்ராஸ் மேட்னி’. விமர்சன ரீதியாக இப்படத்துக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. தற்போது ஓடிடி தளத்திலும் வெளியிடப்பட்டு பல்வேறு திரையுலக பிரபலங்கள் படக்குழுவினரை பாராட்டி வருகிறார்கள். சிவகார்த்திகேயனும் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்திருக்கிறார்கள்.
சிவகார்த்திகேயன் உடன் இருக்கும் புகைப்படங்கள் ‘மெட்ராஸ் மேட்னி’ படக்குழுவினர் வெளியிட்டுள்ளார்கள். மேலும், சிவகார்த்திகேயன் பாராட்டுக்கு நன்றி எனவும் அனைவரும் குறிப்பிட்டுள்ளனர். ”சிவகார்த்திகேயன் அவர்கள் மெட்ராஸ் மேட்னி படக்குழுவினருடன் கலந்துரையாடி பாராட்டியதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். அன்பும் நன்றியும்” என்று தெரிவித்துள்ளார் காளி வெங்கட். மிடில் க்ளாஸ் குடும்பத்தினரின் வாழ்க்கை முறையினை தத்ரூபமாக காட்டிய படம் தான் ‘மெட்ராஸ் மேட்னி’ என்பது குறிப்பிடத்தக்கது.
கார்த்திகேயன் மணி இயக்கத்தில் காளி வெங்கட், ரோஷினி ஹரிப்ரியன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மெட்ராஸ் மேட்னி’. இப்படத்தினை தமிழகமெங்கும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
அன்பிற்கினிய @Siva_Kartikeyan அவர்கள் #MadrasMatinee திரைப்படத்தை படக்குழுவினருடன் கலந்துரையாடி பாராட்டியதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். அன்பும் நன்றியும் pic.twitter.com/qMyI8eOAGV
— Kaali Venkat (@kaaliactor) August 23, 2025