‘பொண்டாட்டி ராஜ்ஜியம்’, ‘சூரியன் சந்திரன்’, ‘பார்வதி என்னை பாரடி’ உள்பட பல்வேறு படங்களில் ஹீரோவாக நடித்தவர் சரவணன். 90-களில் முன்னணி ஹீரோவாக இருந்த அவர், ‘பருத்தி வீரன்’ படத்துக்குப் பிறகு குணசித்திர வேடங்களில் நடிக்கத் தொடங்கினார்.
இவர் நடித்து சமீபத்தில் வெளியான ‘சட்டமும் நீதியும்’ இணையத் தொடர் கவனிக்கப்பட்டது. இந்நிலையில் இவர் தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் வட்டக்காடு என்ற ஊரில், சரவணன் ஸ்டூடியோ ட்ரீம் பேக்டரி என்கிற பெயரில் படப்பிடிப்பு தளமும் ஸ்டூடியோ ஒன்றையும் கட்டியுள்ளார்.
இயக்குநர் பாண்டிராஜ் ஆக. 27-ம் தேதி இதை திறந்து வைக்கிறார். அங்கு கட்டப்பட்டுள்ள விநாயகர் கோயிலுக்கு கும்பாபிஷேகமும் அன்று நடைபெறுகிறது.